
தற்போது ‘இரும்புக்குதிரை’ படத்தில் கிட்டத்தட்ட நடித்து முடித்துவிட்ட அதர்வா அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறனும் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பனும் இணைந்து தயாரிக்கும் ‘ஈட்டி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தை வெற்றிமாறன் பள்ளியில் இருந்து மற்றுமொரு மாணவரான, ‘ஆடுகளம்’ உட்பட பத்து வருட காலம் அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரவி அரசு என்பவர் இயக்குகிறார்.
இந்தப்படத்தில் அதர்வா தடகள விளையாட்டு வீரராக வருகிறார். சமீபத்தில் இந்தப்படத்திற்கான பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டது. அதில் காட்சிப்படி அதர்வா மிகவும் சோர்வுற்று இருப்பது போல இருக்கவேண்டும். இதற்காக அதர்வா செய்த காரியம் தான் நம்மை வியப்பூட்டுகிறது.
காலையில் இருந்து சாப்பிடாமல், பச்சைத்தண்ணீர் கூட குடிக்காமல் இருந்திருக்கிறார் அதர்வா. மாலையில் காட்சிக்கு தேவையானபடி அவரது முகம் வாடி இருக்க, அந்தக்காட்சி எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமைந்துவிட்டதாம்.
209915 382950I cannot thank you fully for the blogposts on your web page. I know you placed a great deal of time and effort into all of them and hope you know how considerably I appreciate it. I hope I will do precisely exactly the same for one more individual at some point. Palm Beach Condos 374119