‘ஈரம்’ என்ற மிரட்டலான படத்தைக் கொடுத்த அறிவழகன் இயக்கியுள்ள படம் தான் ‘வல்லினம்’. விளையாட்டையே வாழ்க்கையாக நினைக்கும் ஹீரோ, வாழ்க்கையை விளையாட்டாக நினைக்கும் ஹீரோயின் இவர்களின் காதல் எப்படி போகிறது என்பது படத்தின் கதை.
ஸ்போர்ட்ஸ் பின்னணியில் உருவாகியுள்ள இந்த ஆக்ஷன் படத்தில் கால்பந்து வீரராக நகுல் நடித்திருக்கிறார்’. கதாநாயகியாக மிருதுளா நடித்திருக்கிறார். ஆஸ்கர் ஃபிலிம்ஸ் ரவிச்சந்திரன் தயாரித்துள்ள இந்தப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பே வெளியானது. ஆனால் படம் வெளிவர தாமதமாகிக்கொண்டே இருந்தது.
ஷூட்டிங் முடிந்த நிலையில் சில காட்சிகளை ரீ ஷூட் செய்ததாகவும் அதே சமயம், படத்தில் கிராபிக்ஸ் பணிகள் அதிகம் இருப்பதால் அதற்கு தகுந்த நேரத்தை படம் எடுத்துக்கொண்டது எனவும் அதனால்தான் இந்த தாமதம் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது படத்தை விரைவில் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.