இதைவிட ஆர்யாவுக்கு வேறு ஒரு பாராட்டும் கௌரவமும் கிடைத்துவிட முடியாது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. பின்னே.. இத்தனை வருட காலமாக தன்னகத்தே வைத்துக்கொண்டிருந்த ‘காதல் இளவரசன்’ பட்டத்தைத் தூக்கி ஆர்யாவிடம் கொடுத்து விட்டாரே கமல்.. இதை வேறு என்ன பாக்கியம் வேண்டும் ஆர்யாவுக்கு.
இது எப்போ நடந்தது என்றுதானே கேட்கிறீர்கள்..? இரண்டு நாட்களுக்கு முன்பு ‘ராஜாராணி’ படத்தின் நூறாவது நாள் வெற்றிக்கொண்டாட்ட விழா நடைபெற்றது. அதில் கமலும் கலந்துகொண்டார். ‘ராஜாராணி’ படத்தின் துவக்க விழா பூஜையின்போது கமல் கலந்துகொண்டு வாழ்த்தியதும் ‘ராஜாராணி’ படத்தின் வெற்றிச் செய்திக்குப்பின் படத்தின் இயக்குனர் அட்லீ கமலை சந்தித்து வாழ்த்துக்கள் பெற்று வந்ததையும் இந்த இடத்தில் குறிப்பிட்டே ஆகவேண்டும்.
இந்த வெற்றி விழாவில் பேசிய கமல், “இத்தனை நாட்களாக இந்தப்பட்டம் என்னிடமே இருந்து வந்தது. இப்போது அதை ஆர்யாவுக்கு கொடுக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. இனிமேல் அவர்தான் காதல் இளவரசன்” என்று மகுடமே சூட்டிவிட்டார்.
ஆனால் ‘காதல் இளவரசன்’ என்ற பட்டத்துக்கு நூறு சதவீதம் பொருத்தமானவர்தான் ஆர்யா. அதுதான் கமல் சரியான ஆளாக பார்த்து பட்டத்தை சூட்டியிருக்கிறார்.