அர்ஜுனின் ஜெய்ஹிந்த் 2 படத்திற்காக 25 லட்சம் ரூபாய் செலவில் அரங்கு

64

ஸ்ரீராம் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பாக அர்ஜுன் தயாரித்து,கதாநாயகனாக நடிக்கும் படம் அர்ஜுனின் ஜெய்ஹிந்த்2. அர்ஜுன் ஜோடியாக சுர்வீன் சாவ்லா நடிக்கிறார் .

மற்றும் ராகுல்தேவ், செரோலேட் க்ளேர், ரவிகாளே, ஜஹாங்கீர், சதீஷ், வினய்பிரசாத், மயில்சாமி, மனோபாலா, ஷபீக், கௌரி, பிரமானந்தம், அம்ஜத், சக்திவேல், சசி, விஜயந்த் பிரார்தர் ஆகியோருடன் இன்னும் சில முன்னணி நடிகர், நடிகைகளும் நடிக்கிறார்கள் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது.

படம் பற்றி அர்ஜுன் சொல்வது ……

படத்தின் படப்பிடிப்பை மைசூரில் துவங்கினோம் இரண்டு ஏக்கர் நிலத்தில் 25லட்சம் ரூபாய் செலவில் சிறைச்சாலை அரங்கை அமைத்தோம் அதில் ராகுல்தேவுடன் நான் மோதும் சண்டை மற்றும் ரவிகாளேயுடன் மோதும் சண்டை காட்சிகள் மற்றும் முக்கியமான கட்சிகளை படமாக்கினோம்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தங்கள் சொத்தாக மட்டுமே நினைகிறார்கள் குழந்தைகள் பெத்தவங்களோட சொத்து மட்டுமல்ல இந்த நாட்டின் பொக்கிஷம்.அப்படிப்பட்ட பொக்கிஷத்தை எப்படி உருவாக்கி கொண்டிருக்கிறோம் அதைத்தான் கதை கருவாக கையாண்டிருக்கிறேன்.

அடுத்த கட்டப் படபிடிப்பு சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
மற்றும் லண்டன், டெல்லி, தாய்லாந்து போன்ற இடங்களிலும் பட பிடிப்பு நடைபெற உள்ளது. கல்வி பற்றிய படம்தான் என்றாலும் கமர்ஷியல் கலந்து இதை உருவாக்கி வருகிறோம் என்றார் அர்ஜுன்.

Leave A Reply

Your email address will not be published.