அப்புக்குட்டியின் நாய் பஞ்ச் டயலாக் பேசுது..!

212


‘அழகர் சாமியின் குதிரை’ படத்தில் குதிரையுடன் நட்பு பாராட்டி நடித்திருந்தார் நடிகர் அப்புக்குட்டி. அந்தப்படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதும் பெற்றார். தற்போது ‘எங்க காட்டுல மழை’ என்கிற படத்தில் நடித்துவரும் அப்புக்குட்டி இந்தப்படத்தில் ‘டக்லஸ்’ என்கிற நாயுடன் நடிக்கிறார்.

மிதுன் கதாநாயகனாக நடிக்கும் இந்தப்படத்தில் அப்புக்குட்டியும் இரண்டாவது நாயகன் ரேஞ்சில் நடிக்கிறார். ‘குள்ளநரி கூட்டம்’ படத்தை இயக்கிய ஸ்ரீபாலாஜி தான் இந்தப்படத்தை இயக்குகிறார். இந்தப்படத்தில் இடம்பிடித்துள்ள இந்த ‘டக்லஸ்’ என்கிற நாய் படம் முழுவதும் ஒரு கேரக்டராகவே வருகிறது. அத்துடன் பல இடங்களில் மைண்ட் வாய்ஸில் பஞ்ச் டயலாக்கும் பேசுகிறதாம். கலகலப்பான காமெடிப்படமாக உருவாகும் இந்தப்படம் செப்டம்பரில் திரைக்கு வர இருக்கிறதாம்.

Comments are closed.