நான்கு படங்களை முடித்ததும் அனுஷ்காவுக்கு கெட்டிமேளம் தானம்..!

70

அனுஷ்காவுக்கு முப்பது வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்னவோ உண்மைதான். ஆனால் முன்னெப்போதையும் விட இப்போதுதான் கவனமாக அதற்கேற்ற மாதிரி கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். நடிப்புக்கு தீனிபோடுவது போல தொடர்ந்து சரித்திரப்படங்களாக அவரைத்தேடி வருகின்றன.

ஏற்கனவே. தெலுங்கில் குணசேகர் இயக்கத்தில் ‘ராணி ருத்ரமாதேவி’ என்ற படத்திலும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ‘பாஹுபாலி’ என்ற சரித்திர படத்திலும் நடித்து வருகிறார் அனுஷ்கா. இதுதவிர சூப்பர்ஸ்டாருக்கு ஜோடியாக ‘லிங்கா’ மற்றும் அஜித்துக்கு ஜோடியாக அவரது 55வது படங்களில் நடித்துவருகிறார்.

இந்தப்படங்களுக்குப்பின்..? நிச்சயமாக டும் டும் டும் தானாம். அதில் எந்த மாற்றமும் இல்லையாம். சமீபத்தில் ‘லிங்கா’ படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அனுஷ்காவை சந்தித்து கதை சொன்னாராம் ஒரு அறிமுக இயக்குனர். அதவும் கூட கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் வேடமாம்.

அந்த கதை அனுஷ்காவை கவர்ந்தாலும் கூட அந்த இயக்குனரிடம் தேதிகள் இல்லை என சாக்குபோக்கு சொல்லாமல், தான் விரைவில் திருமணம் செய்துகொள்ளப்போகிறேன் என்றும் அதைத்தொடர்ந்து படங்களில் நடிக்கப்போவதில்லை என்றும் உண்மையான காரணத்தை கூறி அனுப்பி வைத்தாராம்.

Comments are closed.