ரஜினி பெயரில் வெளியாகும் இன்னொரு புத்தகம்..!

230

 

வாசகர் வட்டாரத்தில் பிரபலமாக அறியப்படுகிற ஒரு எழுத்தாளர் தான் அஜயன் பாலா. இவர் இந்தியா டுடே ரஜினி சிறப்பிதழுக்காக  ‘சுமார் எழுத்தாளனும் சூப்பர் ஸ்டாரும்’ என்ற தலைப்பில் எழுதிய கட்டுரைகள் தற்போது அதே பெயரில் புத்தகமாக தயாராகியுள்ளது. அஜயன் பாலாவினால் வெவ்வேறு காலத்தில் எழுதப்பட்ட  இருபத்தைந்துக்கு மேற்பட்ட கட்டுரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

சினிமா, இலக்கியம், பெண்ணியம், வாழ்வனுபவம், ஆளுமைகள் என வேறுபட்ட பரிணாமங்களை சார்ந்த கட்டுரைகள் இவை. நாதன் பதிப்பகம் மூலமாக வெளியிடப்படும் இந்த நூல் வரும் புத்தக கண்காட்சியில் பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.