தம்பிதுரைக்கு ஜோடியாக ஒரு தமிழ்ப்பொண்ணு..!

236

diana champika 1

தம்பிதுரைன்னு ஒரு படம் இல்லையே என குழம்பவேண்டாம்.. விஜய் ஆண்டனி நடித்து விரைவில் திரைக்கு வரும் அண்ணாதுரை படத்தில் விஜய் ஆண்டனி நடிக்கும் இரண்டு கேரக்டர்களில் ஒன்று தான் தம்பிதுரை.. அவருக்கு ஜோடியாக நடித்துள்ளவர் டயானா சாம்பிகா.. பேரை பார்த்ததும் இதுவும் வழக்கம்போல வடநாட்டு பொண்ணுதான் என நினைத்துவிட வேண்டாம். அக்மார்க் தமிழ்ப்பொண்ணு..

லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்துவிட்டு பார்ட் டைமாக மாடலிங் பண்ணிக்கொண்டு இருந்தவர், விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமாவின் கண்களில் பட, அடித்தது ஜாக்பாட் போன்ற வெள்ளித்திரை கதாநாயகி வாய்ப்பு.. நயன்தாராவையும் ஐஸ்வர்யா ராயையும் மிக்ஸ் பண்ணிய மாதிரி ஒரு ரூட்டை பிடிக்க விரும்பும் டயானா ‘அண்ணாதுரை’ படத்தில் தானே டப்பிங்கும் பேசியுள்ளாராம்.

Comments are closed.