
விமல், நந்திதா நடித்துள்ள ‘அஞ்சல’ படத்தின் ஆடியோவை விஜய் வெளியிட்டார். படத்தை தயாரித்துள்ளவர் ஸ்டண்ட் மாஸ்டர் சூப்பர் சுப்பராயனின் மகன் திலீப் சுப்பராயன்.. ‘ஜில்லா’ மற்றும் ‘புலி’ படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய திலீப் சுப்பராயன், தான் தயாரித்துள்ள ‘அஞ்சல’ படத்தின் ஆடியோவை வெளியிடுமாறு விஜய்யிடம் கோரிக்கை வைக்க எந்த மறுப்பும் சொல்லாமல் அதை நிறைவேற்றி இருக்கிறார் விஜய்.
தங்கம் சரவணன் என்பவர் இயக்கியுள்ள இந்தப்படத்திற்கு மலையாள இசையமைப்பாளரான கோபி சுந்தர் இசையமைத்துள்ளார். படம் ‘அஞ்சல’ என்கிற கிராமத்து டீக்கடையை பிரதானமாக வைத்து நகர்கிறது என்பது ட்ரெய்லரை பார்க்கும்போதே தெரிகிறது. அதுமட்டுமல்ல பசுபதி ஒன்றுக்கு இரண்டாக இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பதையும் காண முடிகிறது.
Comments are closed.