புதிய சிக்கலில் அனிருத்.?

100


ஒருவழியாக ‘வாய் மூடி பேசவும்’ படத்தின் படப்பிடிப்பை 52 நாட்களிலேயே நடத்தி முடித்திருக்கிறார் இயக்குனர் பாலாஜி மோகன். மலையாளத்தில் தற்போது இளம் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் நஸ்ரியா.
முதலில் இந்தப்படத்திற்கு இசையமைக்க அனிருத்தை தான் ஒப்பந்தம் செய்தனர் பாலாஜி மோகனும் தயாரிப்பாளர் வருண் மணியனும். ஆனால் என்ன காரணத்தினாலோ அனிருத் இந்தப்படத்தில் இருந்து விலகிக்கொள்ள இப்போது ராகவேந்திரா என்பவர்தான் இந்தப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.
ஆனால் தற்போது படத்தின் தயாரிப்பாளர் வருண் மணியன் தனது படத்துக்கு இசையமைக்க அட்வான்ஸ் வாங்கிக்கொண்ட அனிருத் சொன்னபடி நடந்துகொள்ள தவறிவிட்டார் என்றும், அதனால் அவர்மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இந்தப்படத்திற்கு இசையமைப்பதற்காக அனிருத் ஐந்து லட்சம் ரூபாய் அட்வான்ஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் புகாரினால் அனிருத்துக்கு தற்போது சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.