அனிருத்திற்கு ‘நடுநிசி நாயகன்’ பட்டம் கொடுத்த விவேக்..!

230

‘நான் தான் பாலா’ படத்தில் சீரியஸ் ஹீரோவாக நடித்த விவேக், தற்போது ‘பாலக்காட்டு மாதவன்’ என்கிற படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். நீண்ட நாட்கள் தயாரிப்பில் இருந்த இந்தப்படம் இப்போது ஒருவழியாக ஆடியோ ரிலீஸ் வரை வந்துவிட்டது.

இந்தப்படத்தில் விவேக்கிற்கு ஜோடியாக சோனியா அகர்வால் நடிக்க, முக்கியமான அம்மா வேடத்தில் ‘செம்மீன்’ ஷீலா நடிக்கிறார். தனது வளர்ப்பு அம்மாவாக ஷீலாவை விவேக் தத்து எடுப்பதும் அதனால் ஏற்படும் காமெடி கலாட்டாக்களும் தான் படம். கவுண்டமணி, விவேக் உட்பட பல நடிகர்களுக்கு நகைச்சுவை பகுதியை எழுதி வந்த ராஜகோபாலுக்கு இது நூறாவது படம்.

சந்திரமோகன் என்பவர் இயக்கியுள்ள இந்த பாலக்காட்டு மாதவனை ட்ரெண்டிங்கிற்கு இழுத்துவரும் அளவுக்கு ஒரு விஷயம் இந்தப்படத்தில் நடந்திருக்கிறது. ஆம்.. இந்தப்படத்திற்காக ஸ்ரீகாந்த் தேவா இசையில் அனிருத் ஒரு பாடலை பாடியுள்ளார். அந்தப்பாடலை விவேக்கே எழுதியுள்ளார்.

இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. தனது படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இவர்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்த விவேக்கின் அழைப்பை ஏற்று, இந்த விழாவுக்கு வந்து இசைத்தகட்டை வெளியிட்டு ஆச்சர்யப்படுத்தினார்கள் சிவகார்த்திகேயனும் அனிருத்தும்.

அனிருத் ‘கொலவெறி’ பாடல் எழுதி அது பாப்புலராவதற்கு முன் திரையுலகில் இருந்து முதல் ஆளாக அனிருத்தை வாழ்த்தியவர் விவேக் தான். அந்த பாசத்திற்காகவே அவர் வந்திருந்தார். அதேபோல சிவகார்த்திகேயனுக்கு ஒரே ஒரு மெசேஜ் மட்டும் அனுப்ப, விவேக்கின் தீவிர ரசிகரான அவரும் இந்த விழாவிற்கு வந்துவிட்டார்.

விழாவில் பேசிய விவேக் இரண்டு விஷயங்களை குறிப்பிட்டார். போன் செய்தால் சிவகார்த்திகேயன் எடுப்பதில்லை என்கிற ஒரு சிலரின் குற்றச்சாட்டு போய் என்பது அதில் ஒன்று. அடுத்ததாக, அனிருத்தின் நள்ளிரவு பணி குறித்து பேசிய விவேக, அவருக்கு ‘நடுநிசி நாயகன்’ என்கிற பட்டத்தையும் சூட்டினார்.

Comments are closed.