மெகாஸ்டாருக்கு ஜோடியாக நடிக்கிறார் ஆண்ட்ரியா..!

89

 

கமலுடன் ‘விஸ்வரூபம்’ படத்தில் நடிப்பதற்கு முன்பு ஆண்ட்ரியா பகத் பாசிலுடன்  அன்னையும் ரசூலும் படத்தில் நடித்தார். ஆனால் கொஞ்ச நாட்களிலேயே அவர் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக செய்தி வெளியிட்டதால் ஷாக் ஆகிப்போனார் ஆண்ட்ரியா.

அதையடுத்து மீண்டும் மலையாளத்தில் நடிக்க அழைத்தபோது மறுத்து விட்டார். ஆனால் ‘லண்டன் பிரிட்ஜ்’என்ற படத்தில் பிருத்விராஜூடன் நடிக்க வாய்ப்பு வரவே அதை தவிர்க்க மனம் இல்லாமல் நடித்தார். அந்தப்படம்கூட இந்தவருடம் பிப்ரவரியில் தான் வெளியானது.

தற்போது தமிழில் பிசியாக இருக்கும் ஆண்ட்ரியாவை மலையாள திரையுலகம் விடுவதாக இல்லை போலும். அனால் இந்தமுறை வாய்ப்பு தேடிவந்திருப்பது ‘ஃபயர்மேன்’ என்கிற படத்தில் மெகாஸ்டார் மம்முட்டிக்கு ஜோடியாக நடிப்பதற்குத்தான்.  கரும்பு தின்ன கசக்குமா என்ன?

Comments are closed.