புரூஸ் லீ – விமர்சனம்

ஜி.வி.பிரகாஷ் கைக்கு பரிசாக ஒரு கேமரா கிடைக்கிறது.. எதிர்பாராத விதமாக அதில் அமைச்சர் மன்சூர் அலிகானின் கொலைசெய்யப்படுவதை பதிவுசெய்கிறார் ஜி.வி.. கொலை செய்தவர் மிகப்பெரிய ரவுடியான முனீஸ்காந்த்..(நம்புங்கள்).. அந்த ஆதாரத்தை எங்கே ஒப்படைக்கப்போனாலும் அனைவரும் வில்லனின் கையாட்களாகவே இருக்கிறார்கள்..

இந்த நிலையில் இந்த போட்டோ விவகாரம் முனீஸ்காந்துக்கு தெரியவருகிறது.. ஜி.வி மற்றும் அவரது நண்பன் பாலசரவணன் ஆகியோரின் காதலிகளை கடத்தி வைத்து கேமராவை கேட்டு மிரட்டுகிறார் முனீஸ்காந்த். ஆத்திரத்தில் கேமராவை ஆற்றில் எறிந்துவிட்ட ஜி.வி இப்போது தனது சித்தப்பாவான ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் உதவியை நாடுகிறார்.. இறுதியில் யார் கை ஓங்குகிறது என்பது க்ளைமாக்ஸ்.

லொக்காலிட்டி பையனாக ஜி.வி.பிரகாஷுக்கு வழக்கம்போல குறும்பும் குமுறலுமான கேரக்டர்.. ஆனால் விரைவில் அவர் தனது நடிப்பில் புதிய பாணியையும் மாற்றங்களையும் கொண்டுவர வேண்டிய தருணம் இது.. ஜி.வி.யின் ஜோடியாக வரும் கீர்த்தி கர்பந்தா குளுகுளு குல்பி ஐஸாக இந்த கோடை வெயிலில் தனது ரொமாண்டிக் மற்றும் கவர்ச்சியான நடிப்பால் கிளுகிளுப்பூட்டுகிறார்.

எப்போதும்போல ஹீரோவை கலாய்க்கும் வேலையை இந்தப்படத்திலும் சரியாக செய்திருக்கும் பால சரவணனுக்கு இதில் கோடை ஆபராக ஒரு ஜோடியையும் கொடுத்திருக்கிறார்கள்.. அந்த கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஷாதிகா பாஸ்மார்க் வாங்குகிறார்.

வில்லனாக புரமோஷனாகி இருக்கிறார் முனீஸ்காந்த்.. அமைச்சரையே பொசுக்கென போட்டுத்தள்ளி டெரர் காட்டினாலும் கூட, வசனம் அதிகம் பேசாவிட்டாலும் கூட, வழக்கம்போல் அவரது கோமாளித்தனங்களையும் குறைவில்லாமல் செய்திருக்கிறார் முனீஸ்காந்த். போலீஸ் அதிகாரி ஆனந்தராஜ், அமைச்சர் மன்சூர் அலிகானை இன்னும் நன்றாக பயன்படுத்தி இருக்கலாம். நான் கடவுள் ராஜேந்திரன் இறுதிக்காட்சிகளில் தனது இருப்பை காட்டுகிறார்.

பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவு மற்றும் ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை படத்துடன் நம்ம்மை ஒன்ற செய்கிறது.. கொலையை போட்டோ எடுப்பது, ஆள் கடத்தல் பண்ணுவது என்கிற இரண்டு பழைய கான்செப்ட்டுகளை எடுத்து அதை லேட்டஸ்ட்டாக தர முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ்..

புரூஸ் லீ என ஜீவிக்கு பெயர் வைத்ததற்கு காரணம் சொன்ன இயக்குனர் அதை எந்த ஒரு இடத்திலும் வலுவாக அடையாளப்படுத்த முயற்சிக்காமல் அப்படியே விட்டுவிட்டது ஏனோ தெரியவில்லை. ஆரம்பத்தில் ஒரு வெடிகுண்டை செய்து, அதை ஜி.வி.பிரகாஷின் காரில் விழச்செய்து படம் முழுக்க பில்டப் காட்டியதில் கொஞ்சம் சுவாரஸ்யம் ஏற்படுத்துகிறார் இயக்குனர்.

படத்தில் குறைகள் சில இருந்தாலும் கேங்ஸ்டர் பாணியில் ஒரு காமெடிப்படத்தை தர முயற்சித்ததற்காகவும், பல காட்சிகளை வேறு படங்களில் இருந்து காப்பியடித்து வைத்திருப்பதை டைட்டில் போடும்போதே ஒப்புக்கொண்டதற்காகவும் இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜை பாராட்டலாம்.

‘நான் கடவுள்’ ராஜேந்திரன்Bala SaravananBruce LeeBruce Lee Tamil Movie ReviewG V Prakash KumarMunishkanthஆனந்தராஜ்கீர்த்தி கர்பந்தாஜி.வி.பிரகாஷ்பாலசரவணன்பிரசாந்த்புரூஸ் லீ – விமர்சனம்முனீஸ்காந்த்