சிலநேரங்களில் நமது சினிமா பிரபலங்கள் மேடைகளில் எதையாவது பேசிவிட்டு போய்விடுவார்கள். ஆனால் அவர்களை அறியாமலேயே சொல்ல மறைத்த சில உண்மைகளையும் சொல்லி விடுவார்கள். அப்படித்தான் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடந்த ஒரு விழாவில் சேரனும் அமீரும் கலந்து கொண்டனர். இதில் பேசிய அமீர், “நல்ல படைப்புகளை தரும் சேரன் நல்லா சம்பாதித்திருக்கிறாரா என்றால் இல்லை. இன்னும் சொந்த வீடு கூட வாங்கவில்லை. விருது வாங்கி என்ன பண்றது. நாளைக்கு பொம்பளைப் பிள்ளைகளை கட்டிக்கொடுக்கும்போது மருமகனுக்கு விருதையா தூக்கி கொடுக்கமுடியும். அதனால, சேரன்.. முதல்ல வீடு வாங்குங்க. நீங்க வீடு வாங்கின பிறகுதான் நானும் வீடு வாங்கணும். ஏன்னா நானும் ரெண்டு பிள்ளைகளுக்கு தகப்பன் தான்.” என்று பேசியுள்ளார். இது இதுவரை அமீரைப்பற்றி ரசிகர்களுக்கு தெரியாத புது தகவல்.
Very interesting info!Perfect just what I was searching
for!Leadership