தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா நேற்று முந்தினம காலமார்.. இதனை தொடர்ந்து பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் அவருக்கு தங்களது இறுதி அஞ்சலியை செலுத்தினர்.. நேற்று மாலை முதல்வரின் உடல் சென்னை மெரீனா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிடத்துக்கு அருகில் நல்லடக்கம் செய்யப்பட்டது..
பல்கேரியா நாட்டில் படப்பிடிப்பில் இருந்த நடிகர் அஜித், முதல்வருக்கு மாரடைப்பு ஏற்பட்ட தகவல் கிடைத்ததுமே சென்னை திரும்ப முடிவு செய்தாராம். ஆனால் கடுமையான பனிப்பொழிவு காரணமாக விமானா சேவை தாமதமானதால் இன்று அதிகாலை தான் சென்னை திரும்பினார். வந்தவர் ஏர்போர்ட்டில் இருந்து தனது மனைவியுடன் அப்படியே ஜெயலலிதாவின் சமாதிக்கு சென்று அங்கே பத்து நிமிடங்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
அங்கிருந்தபோதுதான், நடிகர் சோ காலமான தகவல் அவருக்கு கிடைக்கவே, நேராக அப்பல்லோ மருத்துவமனை சென்று சோவிற்கு அஞ்சலி செலுத்திய பின்னர் தனது வீட்டிற்கு புறப்பட்டு சென்றார்.
Comments are closed.