ஆர்யா-சந்தானம் கூட்டணிக்கு மீண்டும் போட்டாச்சு பூஜை..!

172

ஒவ்வொரு கட்டத்திலும் வெற்றிகரமாக வளர்ந்துவரும் நடிகர்களுக்கும் இயக்குனர்களுக்கும் சோதனைகள் ஏற்படவே செய்யும். அப்போது அவர்கள் மீண்டும் ஒரு தேர்வு எழுதி தங்களை நிரூபிக்க தயாராவார்கள். அந்த நேரத்தில் தன்னை வளர்த்துவிட்ட இயக்குனர்களையோ, அல்லது தான் ஹிட் கொடுத்து கைதூக்கிவிட்ட நடிகர்களையோ தேடிப்போவதும் சகஜமான நிகழ்வுதான்.

அப்படி ஒரு சூழ்நிலை இயக்குனர் ராஜேஸுக்கும் ஏற்பட்டுள்ளது. ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’வின் ரிசல்ட் இதற்குமுன் அவர் கொடுத்த மூன்று ஹிட்டுகளின் வெற்றியையும் திரைபோட்டு மறைத்துள்ளது. எனவே மீண்டும் அவர் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.

இந்த நிலையில்தான் ராஜேஸுக்கு கைகொடுக்க முன்வந்தார் ஆர்யா. சொல்லப்போனால் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ வெற்றிக்கு ராஜேஸுக்கு நன்றிக்கடன் செலுத்தும் விதமாக ஹீரோவாக நடிப்பதுடன் படத்தையும் தனது சொந்த நிறுவனமான ‘தி ஷோ பீப்பிள்’ மூலமாகவே தயாரிக்கவும் செய்கிறார் ஆர்யா.

இந்தப்படத்தில் ராஜேஸின் வலதுகரமான சந்தானமும் உடன்
கைகோர்க்கிறார். ஆர்யாவுடன் முதன்முறையாக இந்தப்படத்தின் மூலம் ஜோடி சேர்கிறார் தமன்னா. இந்தப்படத்தின் பூஜை சமீபத்தில் போடப்பட்டது. ஏற்கனவே ருசித்த வெற்றிபோல இன்னொரு வெற்றிக்கு தயாராகிவிட்டது இந்தக் கூட்டணி

Comments are closed.