ஆறு வருடம் கழித்து விஜய் படத்தில் ஸ்ரீமன்..!

195

Sriman
இளையதளபதி விஜய்யும் குணச்சித்திர நடிகரான ஸ்ரீமனும் நீண்ட நாள் நண்பர்கள்.. விஜய்யுடன் ‘லவ் டுடே’, ‘நிலாவே வா’, ‘நெஞ்சினிலே’ ‘பிரண்ட்ஸ்’, உட்பட பல படங்களில் தவறாது இடம்பெற்று வந்தார். ‘போக்கிரி’யில் மனதில் நிற்கும் வகையில் மிக முக்கியமான கேரக்டரில் நடித்திருந்தார்.

ரஜினி, கமலுக்கு நாசர் எப்படியோ அப்படித்தான் விஜய்க்கு ஸ்ரீமனும்.. தனது படங்களில் ஸ்ரீமனையும் எப்படியாவது இணைத்துக்கொண்டு விடுவார். விஜய்யுடன் கடைசியாக 2010ல் வெளியான ‘சுறா’ படத்தில் இணைந்து நடித்த ஸ்ரீமனுக்கு அடுத்து அவருடன் சேர்ந்து நடிக்கும் விதமாக தோதான கேரக்டர்கள் அமையவில்லை.

தற்போது அந்தக்குறையை தீர்க்கும் விதமாக ‘அழகிய தமிழ் மகன்’ பரதன் இயக்கத்தில் விஜய்யின் 60வது படத்தில் அவருடன் இணைந்து நடிக்கிறார் ஸ்ரீமன். விஜய்யின் அடுத்த படத்தில் எனக்கு நல்ல ரோல் தந்த எனது நண்பர் விஜய்க்கும் இயக்குனர் பரதனுக்கும் நன்றி என குறிப்பிட்டு இந்த தகவலை ஸ்ரீமனே தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ளார்.

Comments are closed.