நடிகர் சங்க கட்டடத்திற்கு 5 லட்சம் நன்கொடை வழங்கினார் விஜயகுமாரி..!

244

vijayakumari contribution

தென்னிந்திய நடிகர் சங்கம் கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கட்டிடம் கட்டுவதற்கான அரசு அனுமதிகளும் கிடைத்த நிலையில் கட்டிட நிதிகளையும் நடிகர் நடிகைகள் தாமாகவே முன்வந்து நன்கொடை அளித்து வருகின்றனர்.

ஏற்கனவே நடிகர் சங்கம் பொது செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி ஆகியோர் தலா 5 கோடி ரூபாய் நன்கொடை அளிப்பதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. கட்டடத்தில் சிறிய திருமண மண்டபத்தை கட்டுவதற்கான செலவை நடிகர் சங்க அறங்காவலர் ஐசரி கணேஷ் மற்றும் ப்ரிவியூ தியேட்டர் கட்டும் செலவை சிவகுமார், சூர்யா, கார்த்தி குடும்பத்தாரும் ஏற்றுகொண்டுள்ளனர்

இந்தநிலையில் சீனியர் நடிகை விஜயகுமாரி நடிகர் சங்க கட்டிட நிதிகாக ரூ 5 லட்சம் வழங்கியுளார். இதை அவர் நடிகர் சங்க பொருளாளர் கார்த்தியிடம் இன்று வழங்கினார். அவருக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளது.

Comments are closed.