“உங்கள் ஆட்களுக்கு அறிவுரை சொல்லுங்கள்” ; தயாரிப்பாளர் தரப்புக்கு விஷாலின் வக்கீல் பதிலடி..!

197

Actor Vishal To gave the response to the producer council

தயாரிப்பாளர் சங்கத்தை பற்றி அவதூறாக பேசினார் என விஷால் மீது நீதிமன்றத்தில் வழக்கு பதியப்பட்டு இருந்தது.. இதற்கு பதில் அளிக்கும் வகையில் நடிகர் சங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் வக்கீல், தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள லாயருக்கு பத்ல் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த விளக்கத்தில், விஷால் தயாரிப்பாளர் சங்கத்தை அவதூறாக பேசவில்லை என்றும், அவர் எப்போதுமே நடிகர்சங்கத்தில் தன்னிச்சையாக செயல்படாமல் சங்கத்தின் நலன் கருதியே செயல்படுவதாகவும், அவரும் ஒரு தயாரிப்பாளர் சங்க உறுப்பினர் என்கிற அளவில் மட்டுமே தனது கருத்துக்களை தெரிவித்ததாகவும் கூறியுள்ளார் விஷால் தரப்பு வக்கீல்.. மேலும் அதில் எப்படி பேசவேண்டும், நடந்துகொள்ளவேண்டும் என உங்கள் ஆட்களுக்கு அறிவுரை சொல்லுங்கள் என்றும் கூறியுள்ளார்.

Comments are closed.