“நடிகர்சங்க புதிய கட்டடத்துல தான் என் கல்யாணம் நடக்கணும்” ; விஷால்..!

208

vishal 11
நடிகர்சங்க கட்டடத்தை மீட்போம் என சொன்னதை செய்துகாட்டிவிட்ட திருப்தியில் நடிகர் சங்க பொறுப்புகளில் படுவேகமாக செயல்பட்டுக்கொண்டு இருக்கிறார் விஷால்.. ஒகே.. அடுத்து அவரது திருமணம் எப்போது என்கிற கேள்வி தான் அவரை சுற்றியுள்ளவர்களுக்கும் அவரது ரசிகர்களுக்கும் கண்முன்னே நிற்கிறது.

இதற்கு சமீபத்தில் கூட வெட்கத்துடன் விஷால் பதில் சொல்லியிருக்கிறார்.. “நடிகர் சங்க இடம், சுமார் நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் நம் கைக்கே திரும்பி வந்துவிட்டது.. இதில் நாம் திட்டமிட்டபட்டி மிக பிரமாண்டமான கட்டடம் உருவாகப்போகிறது.. இதற்கான மாதிரி வரைவு வரும் பொதுக்குழு அன்று உங்களுக்கு கட்டப்படும்.. அதுமட்டுமல்ல, இந்த கட்டத்தை கட்டிமுடித்து, அதில் தான் எனது திருமணத்தை நடத்த வேண்டும் என்கிற குறிக்கோளுடன் இருக்கிறேன்” என வெட்கம் கலந்த புன்னகையுடன் கூறியுள்ளார் விஷால்.

இதிலிருந்து இரண்டு விஷயங்கள் தெளிவாக தெரிகின்றன. ஒன்று இந்த கட்டம் கட்டப்பாட்ட பின்பு தான் விஷாளின் திருமணம் நடக்கும். இன்னொன்று இந்த கட்டடத்தை விஷால் கட்டி முடித்தே தீருவார்.

Comments are closed.