விக்ரம் பிரபுவின் முதல் தயாரிப்பாக உருவாகும் ‘நெருப்புடா’..!

247

neruppuda

அன்னை இல்லத்து வாரிசான விக்ரம் பிரபு நடிகனாக இருந்து தற்போது ஒரு தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.. ஆம்.. பர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் என்கிற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கியுள்ளார் விக்ரம்பிரபு. இதற்கான அறிமுக விழாவும் இந்த நிறுவனத்தின் முதல் பட துவக்க விழாவும் இன்று அன்னை இல்லத்தில் நடைபெற்றது. ஏராளாமான திரையுலக வி.ஐ.பிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர்.

அறிமுக இயக்குனர் அசோக் குமார் இயக்கும் இந்தப்படத்துக்கு ‘நெருப்புடா’ என டைட்டில் வைத்துள்ளார்கள்.. ஆம். சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ மூலம் தீயாய் பரவிவரும் வார்த்தையான ‘நெருப்புடா’ என்கிற டைட்டில் தான் கதைக்கும் பொருத்தமாக இருக்கிறதாம். படத்தில் பயர்மேனாக நடிக்கிறார் விக்ரம் பிரபு. அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்தப்படத்திற்கு ஆர்.டி.ராஜேசகர் ஒளிப்பதிவு செய்கிறார்..

பயர் சர்வீஸ் பற்றிய கதை என்பதால் தீ அல்லது நெருப்பு என டைட்டில் வைக்கலாமா என நீண்ட நாட்களாக யோசித்து வந்தார்களாம். அந்த சமயத்தில் தான் ‘கபாலி’ படத்தில் நெருப்புடா பாடல் வெளியாகி அகில உலக அளவில் அந்த வார்த்தை பேமஸ் ஆனது.. அந்த நேரத்தில் இந்தப்படம் பற்றி கேள்விப்பட்ட தயாரிப்பாளர் கலைபுலி தாணு, “பேசாமல் ‘நெருப்புடா’ என்றே டைட்டில் வைத்துவிடுங்கள்” என பெருந்தன்மையுடன் வார்த்தையை கொடுக்க அதுவே இப்போது படத்தின் டைட்டிலாக ஆகிவிட்டது.

Comments are closed.