கேரள ரசிகரின் ஆசையை நிறைவேற்றிய விஜய்..!

210

vijay with kerala fan

கோடிக்கணக்கில் விஜய் ரசிகர்கள் இருக்கிறார்கள் என ஒரு கணக்கில் எடுத்துக்கொண்டாலும் அத்தனை ரசிகர்களும் விஜய்யை சந்தித்து விட முடியுமா என்ன..? விஜய் மட்டுமல்ல மற்ற முன்னணி நட்சத்திரங்களின் ரசிகர்களுக்கும் அதே நிலைமை தான். அதற்கான வாய்ப்பு யாரோ ஒரு சிலருக்கு ஏதோ ஒரு விதத்தில் ஏதேச்சையாக நிகழும்.

கேரளாவை சேர்ந்த தீவிர விஜய் ரசிகரான நிதின் என்பவர் விஜய்யை சந்திக்க ஆசைப்பட்டார். இதில் சோகம் என்னவென்றால் நிதினுக்கு ஒரு கண் பார்வை கடந்த வருடமே பார்வை விட்டது.. இன்னொரு கண்ணிலும் பார்வை கொஞ்ச கொஞ்சமாக மங்கி வருகிறது.. முற்றிலும் பார்வையை இழப்பதற்குள் விஜய்யை சந்திக்க விரும்பினார் நிதின்..

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட விஜய் உடனே அவரை சென்னைக்கு அழைத்து வரும்படி ஏற்பாடு செய்தார்.. சென்னைக்கு வந்த நிதினுக்கு தைரியம் சொல்லி அவருக்கு பார்வை கிடைக்க ஆகும் மருத்துவ செலவை தான் ஏற்றுக்கொள்வதாகவும் கூறியுள்ளார். ஆனால் அவருக்கு பார்வை கிடைப்பது கஷ்டம் தான் என்கிறார்களாம் மருத்துவர்கள். அதனால் ஆயுர்வேத சிகிச்சையைத்தான் நம்பியுள்ளாராம் நிதின்..

Comments are closed.