
வடிவேலு, சந்தானம் இருவரும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என பிடிவாதமாக காமெடியில் இருந்து ஒதுங்கிக்கொண்ட பிறகு சூரி மட்டும் தான் பிரதான காமெடியனாக வலம் வருகிறார்.. அதற்கடுத்த நிலையில் மொட்ட ராஜேந்திரன், தம்பி ராமையா, காளி வெங்கட், சதீஷ், ரோபோ சங்கர், சமீபத்தில் பாப்புலராகி வரும் யோகிபாபு என ஒரு சிலரே இருக்கின்றனர்.
நடிகர் விஜய்யை பொறுத்தவரை காமெடி நடிகர்கள் விஷயத்தில் பெரிதாக அலட்டிக்கொள்வது இல்லை என்றாலும், தனது ஒவ்வொரு படங்களிலும் சுழற்சி முறையில் காமெடியன்களை பயன்படுத்தி வருகிறார். ‘தலைவா-சந்தானம், ஜில்லா-சூரி, கத்தி-சதீஷ், புலி-தம்பி ராமையா, தெறி-மொட்ட ராஜேந்திரன் என காமெடி கூட்டணி அமைத்தவர் இப்போது தனது 60வது படத்தில் மீண்டும் சதீஷுக்கு வாய்ப்பு தந்துள்ளார்.
Comments are closed.