
மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம் திரையுலக நட்சத்திரங்கள் பல்வேறு வகையில் உதவி வருவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தற்போதைய சூழலுக்கு ஏற்ப உதவிகளை அவர்கள் செய்து வருகிறார்கள். ஆனாலும் அவர்கள் இந்த பேரிடரில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு வர சில காலம் ஆகும்..
அப்படி என்றால் அவர்களுக்கு அரசாங்கம் தவிர தங்களை அரவணைக்கும் ஆதரவுக்கரம் ஒன்று கட்டாயம் இருக்கவேண்டும்.. இருந்தால் தான் நல்லது.. இதை உணர்ந்ததால் தான் நடிகர் சூர்யா திருவள்ளூர் மாவட்டத்தில் மழைவெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நெல்வாய், கச்சூர், கேரகம்பாக்கம் ஆகிய கிராமங்களை தங்களது அகரம் அறக்கட்டளை தத்தெடுக்கும் என கூறியுள்ளார்.
அதேபோல இயக்குநர் மணிரத்னம் மற்றும் அவரது மனைவி சுஹாசினி அவர்களின் நாம் இயக்கத்தின் சார்பாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள சூர்யா நகரை தத்தெடுத்துள்ளனர். அதன் முதல்கட்டமாக அப்பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்களை வழங்கினர் இயக்குனர் மணிரத்னம் மற்றும் சுஹாசினி தலைமையிலான நாம் குழுவினர். மேலும் மருத்துவ உதவிகள், கலந்தாய்வுகள் உட்பட பல உதவிகளை தொடர்ந்து செய்யவுள்ளனராம்.
Comments are closed.