ஸ்டண்ட் யூனியனுக்கு 1௦ லட்சம் ரூபாய் நன்கொடை அளித்த சிவகுமார்..!

251

sivakumar donation

தென்னிந்திய சினி டிவி ஸ்டண்ட் டைரக்டர்ஸ் ஆர்டிஸ்ட் யூனியனின் பொன்விழா நேற்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கோலாகலமாக நடைபெற்றது.. இந்த விழாவில் ரஜினிகாந்த், சிவக்குமார், பாலகிருஷ்ணா, மோகன்லால், இயக்குனர் ஷங்கர், சூர்யா, கார்த்தி, விஷால் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

விழாவில் மூத்த ஸ்டண்ட் கலைஞர்களுக்கும் ஸ்டண்ட் மாஸ்டர்களுக்கும் கேடயம் வழங்கி கெளரவிக்கப்பட்டார்கள். ஏராளமான ஸ்டண்ட் கலைஞர்களின் மேடை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. யூனியனின் தலைவர் அனல் அரசு மற்றும் பொருளாளர் ஜான் செயலாளர் செல்வம் மற்றும் எல்லா ஸ்டண்ட் கலைஞர்களும் ஒண்றினைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தினார்கள்.

இந்த நிகழ்வை தொடர்ந்து நடிகர் சிவகுமார் தனது மகன்கள் சூர்யா-கார்த்தி ஆகியோருடன் சேர்ந்து ஸ்டண்ட் கலைஞர்கள் சங்கத்திற்கு பத்து லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினார்.

Comments are closed.