தொடர் வெற்றி படங்களை கொடுத்து வரும் நடிகர் சிலம்பரசன், இனி தனது ரசிகர்களை காக்க வைக்க மாட்டேன், அவர்கள் சந்தோஷமாக இருப்பதற்காக நான் தொடர்ந்து பணியாற்றுவேன், என்று ‘பத்து தல’ பட நிகழ்ச்சிகளில் கூறி வந்தார்.
இந்த நிலையில், சிலம்பர்சன் டி.ஆர், இன்று தனது வீட்டில் ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ஏராளமான ரசிகர்களும் இந்த சந்திப்பில் கலந்துக்கொண்டார்கள்.
ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள் மற்றும் ரசிகர்களுடன் கலந்துரையாடி புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகர் சிலம்பரசன், அவர்களுக்கு பிரியாணி விருந்து வைத்து உபசரித்தார்.
Comments are closed.