“இந்த பவரு பாம்பு புடிச்சா ஜனங்க ஏத்துக்க மாட்டாங்களா..?” ; பவர்ஸ்டார் கேள்வி..!

276

power star 2

திரைவண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் சினிமா பின்னணியில் உருவாகி இருக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ கேரக்டரில் பட்டையை கிளப்பி இருக்கிறாராம் பவர்ஸ்டார். வருகிற ஜூலை-7ஆம் தேதி படம் ரிலீஸாக இருக்கும் இந்தப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில் பவர்ஸ்டாரை நேரில் சந்தித்தோம்.. படம் குறித்தும், தனது எதிர்கால லட்சியம் குறித்தும், மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை குறித்தும் விலாவாரியாக பகிர்ந்துகொண்டார் பவர்ஸ்டார்.

இந்தப்படத்துல முரட்டுக்காளை மாதிரி மாட்டுக்கொம்பை கையில வச்சிக்கிட்டு நிக்கிறீங்களே என கேட்டால், “அந்தப்படத்துல ரஜினிசார் மாட்டுக்கொம்ப பிடிச்சாரு.. இந்தப்படத்துல நான் கடிச்சிருக்கேன்….. இரண்டுக்கும் வித்தியாசம் இருக்கு சார்” என்கிறார்.

அதுசரி.. ஆனா ட்ரெய்லர்ல பாம்பு சீன், சிகரெட்னு ரஜினியை கலாய்ச்சிருக்கீங்களே என்றால் அதற்கும் பதில் தயாராக வைத்திருக்கிறார். “நிச்சயமா அப்படில்லாம் இல்லைங்க.. கதைக்கு இந்த சீன் இருந்தா நல்லா இருக்கும்னு வச்சிருக்கோம்.. ரஜினி பாம்பை பிடிக்கிறது இருக்கட்டும்.. ஏன் சார் இந்த பவரு, பாம்ப பிடிச்சா ரசிகர்கள் ஒத்துக்க மாட்டாங்களா என்ன” என நம்மிடமே எதிர் கேள்வி கேட்கிறார் பவர்ஸ்டார்.

Comments are closed.