
அரிமா நம்பி ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா ஜோடியாக நடித்து வரும் படம் ‘இருமுகன்’.. இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழாவை வரும் ஆகஸ்ட்-2ஆம் தேதி நடத்த முடிவு செய்துள்ளார்கள்.. இந்த விழாவுக்கு ஒவ்வொரு மொழியில் இருந்தும் ஒவ்வொரு ஹீரோவை அழைக்க முடிவு செய்திருக்கிறார்களாம்.
அந்தவகையில் மலையாள இளம் முன்னணி நடிகரான நிவின்பாலி இந்த விழாவில் கலந்துகொள்ள இருக்கிறார். இவர் விழாவுக்கு வர ஒப்புக்கொண்டதற்கு காரணம் விக்ரம் தான். ஏற்கனவே விக்ரம் இயக்கிய குறும்படத்தில் நடித்துக்கொடுத்தார் நிவின்பாலி.. அந்த நேரத்தில் ஆரம்பித்த நட்பு அப்படியே பலமாக வளர்ந்துவிட்டது.
Comments are closed.