இயக்குநரும் நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் இன்று காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கல்லீரல் பிரச்சனை காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மனோபாலா, சுமார் ஒரு மாதம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பிறகு வீடு திரும்பியவர் கடந்த சில நாட்களாக வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில், இன்று மாலை சுமார் 4 மணியளவில் உயிரிழந்தார். அவருக்கு வயது 69.
பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய மனோபாலா, ‘ஆகாய கங்கை’, ‘ஊர்க்காவலன்’, ‘பிள்ளை நிலா’, ‘சிறைபறவை’, ‘மூடு மந்திரம்’ உள்ளிட்ட 20-க்கும் மேற்பட படங்களை இயக்கியிருப்பதோடு, ‘சதுரங்க வேட்டை’ உள்ளிட்ட 3 திரைப்படங்களை தயாரித்திருக்கிறார்.
படம் இயக்குவதை நிறுத்திய பிறகு நடிப்பில் கவனம் செலுத்தியவர் ‘பிதாமகன்’, ‘துப்பாக்கி’, ‘சீமராஜா’, ‘டான்’, ‘அரண்மனை’ உள்ளிட்ட பல வெற்றி படங்களில் நடித்திருக்கிறார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மனோபாலாவின் உடலுக்கு ஏராளமான திரையுலக பிரமுகர்களும், அரசியல் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Comments are closed.