மணற்கொள்ளையை பற்றிய கருத்தை மையமாக கொண்டு உருவாகும் வீராபுரம் என்கிற படம் ஒரு உண்மைச் சம்பவத்தாய் அடிப்படையாக கொண்டது. செந்தில்குமார் இயக்கும் இப்படத்தின் நாயகனாக அங்காடித்தெரு புகழ் மகேஷ் மற்றும் நாயகியாக உறுதிகொள் புகழ் மேகனாவும் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, மதுரை மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இறுதிகட்ட படபிடிப்பு செங்கல்பட்டு அருகே நடந்து வருகிறது. தமிழ் சினிமாவில் வழக்ககமாக சொல்லப்படும் காதல் கதை அல்லாது, இப்படத்தில் ஒரு சமுதாய பிரசச்சனையை சொல்ல விரும்பிய இயக்குனர் மணற்கொள்ளையால் நடந்த ஒரு உருக்கமான உண்மைச் சம்பவத்தை மிகவும் அழகாக கையாண்டு வருகிறார்.
இதுவரை நடித்திடாத ஒரு புதுமையான கதாபத்திரத்தில் அங்காடித்தெரு மகேஷ் நடித்து வருகிறார், இப்படத்திற்க்குப் பிறகு மகேஷ் மிகச்சிறந்த ஆக்ஷன் ஹீரோவாக வலம் வருவார் எனவும் வீராபுரம் மகேஷ் என்று அழைக்கப்படுவார் என்றும் இயக்குனர் நம்பிக்கைத்தெறிவித்துள்ளார்.

Comments are closed.