ஜெயம் ரவியின் ஆசை நிறைவேறுமா..?

242

jayam ravi as vijayan
படத்துக்குப்படம் மாறுபட்ட கேரக்டர்களில் கவனம் செலுத்தி நடித்து வரும் ஜெயம் ரவியின் மனதில் நீண்ட நாட்களாகவே ஒரு ஆசை உண்டு.. நமது புட்பால் வீரரான ஐ.எம்.விஜயன் பற்றிய சுயசரிதையை படமாக்கவேண்டும் என்பதும் அந்த கேரக்டரில் தான் நடிக்கவேண்டும் என்பதும் தான் அது. இந்த விஜயன் வேறு யாருமல்ல, ‘திமிரு’, ‘கொம்பன்’, சமீபத்தில் வெளியான ‘கெத்து’ ஆகிய படங்களில் வில்லனாக மிரட்டினாரே அவர்தான்.

“அர்ஜுனா விருது உட்பட பல விருதுகளை பெற்று புட்பால் போட்டிகளில் நமக்கு நல்ல மரியாதையை தேடித்தந்த விஜயன் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புகிறேன்.. இந்தியில் பாக் மில்கா பாக், மேரிகோம் போன்ற படங்கள் வீரர்களின் சுயசரிதையை மையப்படுத்தி வெளியாகின்றன. தமிழில் ஏன் அப்படி எடுக்க கூடாது” என தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார் ஜெயம் ரவி.

Comments are closed.