‘அச்சமின்றி’ படத்துக்காக தனது முடிவை மாற்றிய சமுத்திரக்கனி..!

224

achaminri
நடிகர் விஜய் வசந்த், இயக்குனர் ராஜபாண்டி, இசையமைப்பாளர் பிரேம்ஜி ஆகியோர் என்னமோ நடக்குது படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் ‘அச்சமின்றி’ படத்தின் மூலம் இணைகிறார்கள். இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக முக்கிய வேடத்தில் சமுத்திரகனி நடிக்கிறார்.

அவர்தான் விசாரணை படத்துக்குப்பிறகு காக்கி யூனிபார்மே போடமாட்டேன் என உறுதி எடுத்துவிட்டாரே என்றுதானே கேட்கிறீர்கள்.. உண்மைதான்.. ஆனால் அச்சமின்றி படத்தின் கதையும், வித்தியாசமான கோணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள அவரது போலீஸ் கதாபாத்திரமும் தான் அந்த கேரக்டரை ஏற்றுக்கொள்ள அவரை தூண்டியதாம்.. தான் இயக்கிய அப்பா படம் போல இதுவும் இந்திய கல்வி முறையை ஒரு புதிய கோணத்தில் அலசி விமர்சிக்கிறதாம்.

Comments are closed.