‘நாடோடிகள்’ படத்தில் அறிமுகமான அபிநயா அந்த ஒரு படத்தின் மூலமே ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தவர். அதன்பின் தனது தாய்மொழியான மலையாளம் மற்றும் தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்தவர், தற்போது தனுஷ் நடித்துவரும் இந்திப்படமான ‘ஷமிதாப்’பில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.
தமிழில் அவரின் சிறப்பான நடிப்பை பார்த்துவிட்டுத்தான் அவருக்கு இந்த வாய்ப்பு தேடிவந்திருக்கிறது. இந்தப்படத்தின் சில காட்சிகளில் அபிநயா நடித்து முடித்துவிட்டார். இன்னும் ஒரு பாடல் காட்சியில் மட்டும் நடிக்கவேண்டியது பாக்கி இருக்கிறதாம். இதுதவிர தற்போது விஷாலுடன் ‘பூஜை’, ஜெயம் ரவியுடன் ‘தனி ஒருவன்’ ஆகிய படங்களிலும் நடித்து வருகிறார் அபிநயா.

Comments are closed.