ஆர்யாவுக்கு ஒரு நியாயம்..? அவர் தம்பிக்கு ஒரு நியாயமா..?

177

ஆர்யாவின் தம்பி சத்யா நடித்துள்ள ‘அமரகாவியம்’ படம் வரும் செப்டம்பர்-5ஆம் தேதி ரிலீசாக இருக்கிறது. ‘நான்’ படத்தை இயக்கி நம் கவனம் ஈர்த்த ஜீவா ஷங்கர் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். கேரள அழகுப்பதுமை மியா ஜார்ஜ் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது. அதில் பேசிய ஆர்யா, “இந்த ஜீவா ஷங்கர் சும்மா இருக்காம என் தம்பிய நடிக்கச்சொல்லி உசுப்பேத்தி விட்டுட்டார்.. என் வீட்லயோ நீ தாண்டா அவன் படிப்பை கெடுக்குறேன்னு என்னைப் பிடிச்சு திட்டுறாங்க” என்றார்.(ஜாலியாகத்தான்).

“நீங்க மட்டும் நடிகராகிட்டீங்க, உங்க தம்பி நடிகரா ஆகக்கூடாதா..? அப்படின்னா உங்களுக்கு போட்டியா வந்துடுவாருன்னு பொறாமையா..?ன்னு ஒரு நிருபர் கேட்க, “அய்யய்யோ.. எனக்கு படிப்பு வரலங்க.. அதான் இப்படி வந்துட்டேன்.. அவனாவது படிக்கட்டுமே அப்படிங்கிற அர்த்தத்துலதான் வீட்டுல அப்படி சொன்னாங்க” என சமாளித்தார்.

ஆர்யாவே சொந்தமாக தயாரித்துள்ள இந்தப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 80களில் தான் பார்த்து உணர்ந்த ஒரு சம்பவத்தின் அடிப்படையில் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் ஜீவா ஷங்கர்.

Comments are closed.