நவ-2௦ல் ரிலீஸாகும் ‘ஆரண்யம்’..!

206

aaranyam
காடு என்றாலே திகில் தான்.. ஆனால் காடும் காடு சார்ந்த இடங்களில் நடக்கும் காதல் கதையாக உருவாகி இருக்கிறது ‘ஆரண்யம்’ படம். இப்படத்தைப் புதுமுக இயக்குநர் குபேர்.ஜி இயக்கியுள்ளார். கேரளாவில் உள்ள சாலக்குடி காடு முதல் தாய்லாந்தில் உள்ள காடு வரை பல காடுகளில் கதை பயணிக்கிறதாம். அதுசரி.. காட்டுக்குள் கதை எப்படி நுழைகிறதாம்..?

பொறுப்பில்லாத நான்கு வாலிபர்களுக்கு ஊதாரித்தனமாக ஊர் சுற்றுவதுதான் முழுநேரத் தொழில். ஜாலியாக இருக்க ஒரு சிறு திருட்டில் ஈடுபடுகிறார்கள். அப்படி ஒரு செல்போனைத் திருடிவிடவே அதன் விளைவு விபரீதமாகி விடுகிறது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஊரைவிட்டு காட்டுக்கு ஒடுகிறார்கள். முடிவு என்ன என்பதே கதையாம்.

முற்றிலும் புதுமுகங்கள் நடித்துள்ள இந்தப்படத்தை முதலில் டெலிபிலிமாக எடுக்கத்தான் நினைத்தார்களாம். ஆனால் இதை படமாகவே எடுக்கலாம் என்று ஊக்கம் தந்தாராம் இப்படத்தின் நாயகனான ராம். இந்தப்படத்தை தயாரித்துள்ள நிறுவனத்தின் பெயர் என்ன தெரியுமா..? ‘ஆஹா ஓஹோ புரொடக்சன்ஸ்’. வரும் 20 ஆம் தேதி ‘ஆரண்யம்’ வெளிவர விருக்கிறது.

Comments are closed.