திரை எங்கும் நிரம்பி இருக்கும் ‘காதல்’ படங்கள் மூலம் இந்திய திரை படங்களுக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி தந்த யாஷ் ராஜ் films பட நிறுவனம் முதல் முறையாக தமிழில் நேரடியாக தயாரித்து, நானி – வாணி கபூர் நடிக்க, அறிமுக இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில், வெளி இட இருக்கும் ‘ஆஹா கல்யாணம்’ திரை படத்தின் இசை வெளியீடு இந்த மாத 21ஆம் தேதி நடக்க உள்ளது. அதன் முன்னோட்டமாக இந்த படத்தின் single track இன்று மாலை 5 மணி முதல் ரேடியோ மிர்ச்சி வானொலியில் ஒலி பரப்பாக உள்ளது. தரனின் இசையில் உருவான ‘ஆஹா கல்யாணம் ‘ பாடல்கள் இப்படத்தின் வெற்றிக்கு முன்னோடியாக இருக்கும் .இன்று வெளி வர உள்ள single track, தங்களது அபிமான நடிகர்கள் மேல் உள்ள பேரன்பினால் பிரிந்து கிடக்கும் ரசிகர்கள் எல்லோரும் ரசிக்க தக்க வகையில் ஒருமித்த குரலில் வரவேற்கும் பாடலாக இருக்கும் .பிரபல தமிழ் நடிகர்களின் பிரபலமான பஞ்ச் வசனங்களை மையமாக வைத்து எழுத பட்ட இப்பாடல் பஞ்ச் பாடல் என அழைக்க படுகிறது. சூப் பாடலை போலவே மதன் கார்க்கி இயற்றி உள்ள பஞ்ச் பாடலும் உலக அளவில் பிரசித்தி பெரும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
Related Posts