‘நான் ஈ’ வெற்றியை தொடர்ந்து, நானி நடிப்பில் தமிழில் வெளியாகும் படம் தான் ‘ஆஹா கல்யாணம்’. இந்தியில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான யாஷ்ராஜ் ஃப்லிம்ஸ் நிறுவனம் தயாரித்த ‘பாண்ட் பாஜா பாரத்’ படத்தின் ரீமேக் தான் இது. நானிக்கு ஜோடியாக வாணிகபூர் நடித்துள்ள இந்தப்படத்தை விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குனராக இருந்த கோகுல் கிருஷ்ணா இயக்கியுள்ளார்.
இந்தியில் வெளியானபோது இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதோடு வசூலையும் வாரிக்குவித்தது. தமிழிலும் அதுபோன்ற சாதனையை நிகழ்த்தினால் தான், தங்களது காலை கோலிவுட்டிலும் அழுத்தமாக ஊன்றமுடியும் என்பதால் இந்தப்படத்தை பார்த்து பார்த்து செதுக்கியுள்ளது யாஷ்ராஜ் ஃப்லிம்ஸ் நிறுவனம்.
இந்தப்படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு ‘U/A’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். இம்மாதம் 21 ஆம் தேதி இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.