ஏ.ஆர்.முருகதாஸின் அசிஸ்டெண்ட்டா..? இந்தா பிடி வாய்ப்பை..!

222

‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், ‘மான் கராத்தே’ திருக்குமரன், ‘அரிமா நம்பி’ ஆனந்த் ஷங்கர் என ஏ.ஆர்.முருகதாசின் பாசறையில் உதவி இயக்குனர்களாக இருந்து வெளிவந்தவர்கள அனைவரும் வெற்றிக்கொடி நாட்டி வருகிறார்கள்.. அந்த பட்டியலில் இப்போது புதிதாக சேர இருப்பவர் இயக்குனர் ராஜூ கணபதி.

மயூகா கிரியேஷன்ஸ் என்னும் புதிய நிறுவனம் தயாரிக்கும், இன்னும் பெயரிடப்படாத படத்தை இயக்குவதன் மூலம் இயக்குனராக அடி எடுத்துவைக்கிறார் ராஜூ கணபதி… இவர் முருகதாஸிடம் தமிழ்,  இந்தி, தெலுங்கு என மூன்று மொழிகளிலும் உதவி இயக்குனராக வேலை பார்த்தவர்.

இந்தப்படத்தில் வைபவ் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ‘பிரம்மன்’ படத்தில் நடித்த லாவண்யா திரிபாதி நடிக்கிறார். அதேபோல பிரபல ஒளிப்பதிவாளர் ஆர்.டி.ராஜசேகரிடம் பல படங்களில் பணியாற்றிய ஜெயப்பிரகாஷ் என்பவர் இந்தப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்..

குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம் என்னவென்றால் நீண்ட இடைவெளிக்குப்பின் இசையமைப்பாளர் மரகதமணி தமிழில் இந்தப்படத்திற்கு இசையமைப்பதன் மூலம் மீண்டும் என்ட்ரி கொடுத்திருக்கிறார். இந்தப்படத்தின் துவக்க விழா பூஜையில் முருகதாஸ் கலந்துகொண்டு படத்தை துவக்கி வைத்திருக்கிறார். இந்தமாத இறுதியில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

Comments are closed.