எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கிய சென்சார் ; இயக்குனர் விரக்தி..!

223

MPM Movie

‘திலகர்’ படத்தில் நடித்த துருவா ஹீரோவாகவும், ஐஸ்வர்யா தத்தா. அஞ்சனா. இரண்டு பேர் நாயகிகளாகவும் நடித்துள்ள படம் தான் ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன’.. சரண்யா முக்கியமான வேடத்தில் நடித்துள்ள இந்தப்படத்திற்கு சென்ஸார் மறுக்கப்பட்டிருக்கிறது. என்ன காரணம்..?
படத்தின் இயக்குநர் ராகேசின் குமுறல் வாக்குமூலம் இதோ..

இது பெண்களுக்கான, சிறுவர்களுக்கான விழிப்புணர்வு படம் இது. ஒவ்வொரு நாளும் பெண்களையும், குழந்தைகளையும் அச்சுறுத்தும் சமூக விரோத சம்பவங்கள் நிறைய நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது. அதை செய்திகளாகப் படிக்கிறோம். தொலைக்காட்சிகளில் சிசிடிவியினால் பதிவு செய்யப்பட்ட வீடியோவாகப் பார்க்கிறோம். சமூக வலைதளங்களில் பரப்பி விழிப்புணர்வை ஏற்படுத்துகிறோம். அங்கெல்லாம் சென்ஸார் தலையிடுவதில்லை.

அப்போதெல்லாம் அதனால் மக்களின் மனம் பாதிக்கப்படுகிறதா இல்லையா என யாரும் தடை விதிப்பதில்லை. ஆனால் அதையே மக்களுக்கும் பெண்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக எடுத்தால் பிரம்பை தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறது சென்ஸார்.

நான் சொல்லியிருக்கும் கதையை இங்கு நடக்கவில்லையென்றோ, அவை சமூக தளங்களில் வலம் வரவில்லையென்றோ சென்ஸார் அதிகாரிகளால் மறுக்கமுடியவில்லை. ஆனால் எந்த சான்றிதழும் தராமல் மறுக்க மட்டும் முடிந்திருக்கிறது.

என் படத்திற்கு சென்ஸார் ‘யு/ஏ’ அல்லது ‘ஏ’ சான்றிதழாவது தாங்க என்று வாதாடி, அழுதும் கூட கேட்டுப் பார்த்துவிட்டேன். எந்த சான்றிதழும் தரவில்லை. ரிவைஸிங் கமிட்டிக்கு போங்க என்று சொல்லிவிட்டார்கள்.

சிகரெட் பிடிக்காதீர்கள் என்பதை சிகரெட் பிடிப்பதுபோல் காட்டித்தானே எச்சரிக்கிறார்கள்? அதுபோல சமூக விரோத சம்பவங்களைக் காட்டித்தான் என் படத்தில் எச்சரிக்கை செய்துள்ளேன். அதற்கு ரிவைஸிங் கமிட்டியா?. படைப்பாளிகளின் கருத்துச் சுதந்திரம் இந்த சினிமாவில் மட்டும் இவ்வளவு கடுமையாக தாக்கப்படுகிறது. இதற்கு வழிகாட்டும் முறையையாவது உருவாக்கித் தாருங்கள்” என குமுறுகிறார் இயக்குநர் ராகேஷ்.

Comments are closed.