‘ஒண்டிக்கட்ட’ மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்த இசையமைப்பாளர் பரணி..!

243

bharani as director

கிட்டத்தட்ட பதினெட்டு வருடங்களுக்கு முன் விஜயகாந்த்-சூர்யா இணைந்து நடித்த ‘பெரியண்ணா’ படம் மூலம் இசையமைப்பாளராக ஆனவர் பரணி.. ‘பார்வை ஒன்றே போதுமே’ படத்தின் பாடல்களை பட்டிதொட்டியெங்கும் ஒலிக்க செய்ததில் ரசிகர்களிடையே பிரபலமான இவர், தொடர்ந்து அதை தக்கவைக்க தவறினார்..

இந்தநிலையில் தற்போது ‘ஒண்டிக்கட்ட’ படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். கிராமத்து நாகரிகத்தை இதில் பதிவிட்டிருக்கிறேன். மண் சார்ந்த வாழ்க்கையையும் மக்களையும் இதில் பிரதிபலித்து இருக்கிறோம் படத்தின் கதாபாத்திரங்கள் பேசப்படும் மாதிரி உருவாக்கப்பட்டுள்ளது… நாம் பிறந்த போதும் ஒண்டிக்கட்டையாகத்தான் பிறக்கிறோம்..போகும் போதும் ஒண்டிக்கட்டையாகத் தான் போகப் போகிறோம்.. இதைத்தான் இந்தப்படத்தில் சொல்ல்லியுள்ளேன்” என்கிறார் பரணி..

தெனாவட்டு, குரங்கு கைல பூ மாலே, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது போன்ற படங்களில் காரக்டர் ரோல்களில் நடித்த விக்ரம் ஜெகதீஷ் இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக நேகா நடிக்கிறார். இவர் உச்சத்துல சிவா, தண்ணில கண்டம் போன்ற படங்களில் நாயகியாக நடித்தவர்.

Comments are closed.