முற்றிலும் வித்தியாசமான விதத்தில் சின்னிஜெயந்த் நடிக்கும் ‘ரூபாய்’..!

231

roopaay

ஒரு காலத்தில் ரஜினி, கமல் உட்பட பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் அவர்களது நண்பனாக நடித்தவர் நகைச்சுவை நடிகர் சின்னி ஜெயந்த்.. கடந்த இரண்டு வருடங்களாக குணச்சித்திர நடிகராக மீண்டும் தனது இன்னிங்சை தொடங்கியுள்ள சினி ஜெயந்த் விரைவில் வெளியாகவுள்ள ‘ரூபாய்’ படத்தில் முற்றிலும் மாறுபட்ட வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார்.

கயல் பட ஜோடியான சந்திரன் – ஆனந்தி இதில் மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். படத்தை அன்பழகன் இயக்கியுள்ளார். பரணி (கயல் சந்திரன்) பாபு ( கிஷோர் ரவிச்சந்திரன்) இருவரும் நண்பர்கள்.இரண்டு நாளைக்குள் லாரி டியூ கட்டவில்லை என்றால் இவர்களுக்கு சொந்தமான ஒரே சொத்தான லாரியை சேட்டு பறிமுதல் செய்துவிடுவார் என்ற நிலையில் தேனியில் இருந்து சென்னை கோயம்பேடு மார்கெட்டிற்கு சவாரி வருகின்றனர்.

வந்த இடத்தில் குங்குமராஜன் (சின்னி செயந்த்), பொன்னி (கயல் ஆனந்தி) இருவரையும் சந்திப்பதால் இவர்களோடு சேர்ந்து வாழ்க்கையில் எதிர்பாராத பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்கள்.இறுதியில் அந்த பிரச்சனையில் இருந்து நால்வரும் மீண்டார்களா? இல்லையா? என்ற பதிலுக்காக பயணம்தான் இந்த ரூபாய்

“பணம் எல்லோருக்கும் அவசியம் தான்.. அதை நியாயமாக சம்பாதித்தால் சந்தோஷமாக வாழலாம்.. நேர்மை இல்லாமல் சம்பாதிக்கும் பணத்தால் சந்தோஷத்தை தொலைப்பதோடு சங்கடங்களையும் சந்திக்க நேரிடும்..: இதை தான் இந்த படத்தில் பதிவு செய்திருக்கிறோம்” என்கிறார் இயக்குனர் அன்பழகன்..

Comments are closed.