‘சங்கமித்ரா’வில் இருந்து விலகினார் ஸ்ருதிஹாசன்.!

341

sruthihasan

பாகுபலி போல பிரமாண்டமான படமாக தான் இயக்கம் சங்கமித்ரா’வை உருவாக்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் இயக்குனர் சுந்தர்.சி.. தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிப்பதற்காக ஒப்ந்தமாகினர். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

சமீபத்தில் கேன்ஸ் திரைப்படவிழாவில் இந்தப்படத்தை பற்றிய அறிவிப்பு, பர்ச்ளுக் ஆகியவை சிவப்பு கம்பள வரவேற்புடன் வெளியிடப்பட்டன. இந்தநிலையில் தான் இந்தப்படத்தில் இருந்து ஸ்ருதிஹாசன் விலகியுள்ளார் என தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..

“துரதிர்ஷ்டவசமாக சங்கமித்ராவில் பங்காற்ற வேண்டாம் என்ற முடிவை ஸ்ருதிஹாசன் எடுக்கும் நிலையில் உள்ளார். இந்த படம் எவ்வளவு பெரியது, 2 வருடங்கள் படப்பிடிப்புக்கான தேதிகள் என அனைத்தும் தெரிந்தே ஸ்ருதிஹாசன் நடிக்க வந்தார். தனது கதாபாத்திரத்துக்கான பயிற்சி, முழு வடிவ திரைக்கதை மற்றும் முறையான படப்பிடிப்பு தேதிகள் ஆகியவை குறித்த முக்கியத்துவம் அவருக்கு தெரியும்.

படப்பிடிப்புக்கு தயாராக, ஏப்ரல் மாதத்திலிருந்து சிறந்த சண்டைப் பயிற்சியாளரிடம் பயிற்சி பெற ஆரம்பித்துவிட்டார். ஆனல், சங்கமித்ரா படத்தின் மீது அவருக்கிருந்த ஆர்வம், அர்ப்பணிப்பு ஆகியவற்றை தாண்டி, இந்த முடிவை எடுக்கவேண்டியிருந்தது. முழுமையான ஸ்க்ரிப்ட் அவருக்கு தரப்படவில்லை. படப்பிடிப்பு தேதிகளும் சரியாக முடிவு செய்யப்படவில்லை. இதுவே அவரது முடிவுக்குக் காரணம்” என இதுகுறித்து ஸ்ருதிஹாசன் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. .

Comments are closed.