“நாலு தெருவுக்கு பெயர் வைத்தால் தான் என் பெயர் மக்கள் மனதில் நிற்குமா..?” ; இளையராஜா கேள்வி..!

237

ilaiyaraja speech 1

நல்ல கருத்துள்ள சில படங்களை இயக்கி இருந்தாலும், ஒரு நடிகையின் காதல் கதை என்கிற படத்தை இயக்கியபின் இயக்குனர் வேலு பிரபாகரன் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. கிட்டத்தட்ட அவரை செக்ஸ் படம் எடுப்பதாகவே பலரும் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். இதனால் நீண்ட நாட்களாக படம் இயக்காமல் அமைதிகாத்த வேலு பிரபாகரன், தற்போது ‘ஒரு இயக்குனரின் காதல் டைரி’ என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

தன் மீது விழுந்துள்ள மோசமான முத்திரையை உடைக்கும் விதமாக இந்தப்படத்திற்கு இசைஞானி இளையராஜாவை இசையமைக்க வைத்துள்ளார்.. நேற்று இந்தப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் இளையராஜா, கலைப்புலி தாணு, பாடலாசிரியர் சினேகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்..

விழாவில் சினேகன் பேசும்போது, இளையராஜாவை புகழ்வதாக நினைத்துக்கொண்டு, “இளையராஜாவின் பெயரில் கல்லூரிகள் கட்டியிருக்க வேண்டாமா, நாலு தெருவுக்காவது அவர் பெயரை வைத்திருக்க வேண்டாமா” என ஆதங்கத்தில் பொங்கினார்.

ஆனால் அடுத்து பேசிய இளையராஜா, “ரசிகர்களின் மனதில், உயிரில் ரத்தத்தோடு நான் கலந்துவிட்டபோது நாலு தெருவுக்கு என் பெயரை வைப்பதால் தான் என் பெயர் நிலைத்து நிற்குமா என்ன..?” என சினேகனின் கேள்விக்கு பதில் கூறியவர், அடுத்து மேலும் பேசாமல் இறங்கி சென்றுவிட்டார்.

Comments are closed.