தனுஷின் ஹாலிவுட் பட ஷூட்டிங் துவங்கியது..!

196

dhanush as fakir

தனுஷ் திரையுலகில் நுழைந்து இத்துடன் 15 ஆண்டுகள் ஆகின்றன.. இத்தனை வருடங்களில் இங்கிருக்கும் இளம் நடிகர்களில் பாலிவுட் சென்று நடித்தபோதே அனைவரின் புருவங்களையும் உயரவைத்தவர் தனுஷ்.. இப்போது ஹாலிவுட்டிலேயே அடியெடுத்து வைத்துள்ளார் என்றால் இது சாதாரண விஷயமா என்ன..?

படத்தின் பெயர் ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்’. கனடா நாட்டைச் சேர்ந்த கென் ஸ்காட் இயக்கத்தில் ரொமான்டிக் காமெடி படமாக உருவாகிறது. ஆர்ட்டிஸ்ட் திரைப்படத்தில் நடித்த ஹாலிவுட் நடிகை பெரெனைஸ் பிஜோ முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் ஃபகிர் எனும் கேரக்டரில் டைட்டில் ரோலில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்பையில் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பெல்ஜியம், பாரிஸ், ரோம் ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது

Comments are closed.