தென் தமிழக தலைவரின் வாழ்க்கையை படமாக்கும் சீனுராமசாமி…!

234

seenu ramasamySeenuramasamy

சீனுராமசாமி, விஜய்சேதுபதி கூட்டணியில் உருவாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் தான் ‘தர்மதுரை’. மிகவும் உணர்வுப்பூர்வமான ஒரு கதையை கையிலெடுத்து, அழகியலோடு படமாக்கி ரசிகர்கள் அனைவரையும் குடும்பத்துடன் தியேட்டருக்கு வந்து ரசிக்க வைத்தார் சீனுராமசாமி.. படத்திற்கு தேசிய விருது உள்ளிட்ட பல உயரிய கௌரவங்கள் கிடைத்தன..

தற்போது தனது அடுத்த படத்தையும் விஜய்சேதுபதியை வைத்தே இயக்கவுள்ளார் சீனுராமசாமி. ‘மாமனிதன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப்படத்தில் தென் தமிழகத்தில் வாழ்ந்த ஒரு தலைவரின் சுசரிதையை சொல்ல இருக்கிறாராம் சீனுராமசாமி.. மேலும் தற்போது படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளையும் முடித்துவிட்டார் சீனுராமசாமி. இந்தப்படத்துக்கும் யுவன்சங்கர் ராஜா தான் இசையமைக்கிறார்.

Comments are closed.