சென்டிமென்ட்டாக மே-10ல் ‘சர்வர் சுந்தரம் ஆடியோ ரிலீஸ்..!

244

server sundaram audio release

சந்தானம் ஹீரோவாக நடித்து கடந்த வருடம் வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம் ஓரளவு வெற்றி பெற்றாலும் கூட சந்தானத்தின் அடுத்த படம் ரிலீஸாவதில் என்னவேன்றே தெரியாத தாமதம் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் தற்போது, ‘சர்வர் சுந்தரம், சக்க போடு போடு ராஜா, ஓடி ஒடி உழைக்கணும்’ மற்றும் ‘மன்னவன் வந்தானடி’ என கிட்டத்தட்ட நான்கு படங்கள் அடுத்தடுத்து தயாராகி வருகின்றன..

இந்த நான்கில் முதலாவதாக ‘சர்வர் சுந்தரம்’ படம் வெளியாகும் என தெரிகிறது. அதற்கு அச்சாரமாக வரும் மே-1௦ஆம் தேதி இந்தப்படத்தின் ஆடியோவை ரிலீஸ் செய்கிறார் சந்தானம். சந்தானம் முதன்முதலாக சோலோ ஹீரோவாக நடித்து அவருக்கு கதாநாயகன் அந்தஸ்த்தை கொடுத்த ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படமும் இதேபோல மே-1௦ஆம் தேதிதான் வெளியாகி வெறி பெற்றது..

அந்த சென்டிமென்ட்படி இந்த தேதியை தேர்ந்தெடுத்துள்ளார் போல் தெரிகிறது. ‘சர்வர் சுந்தரம்’ படத்தை ஆனந்த் பாபு என்பவர் இயக்க சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.

Comments are closed.