விஷாலின் ஆலோசனைப்படி ஜூன்-23க்கு தள்ளிப்போன ‘வனமகன்’ ரிலீஸ்..!

263

vanamagan release

இயக்குனர் விஜய் டைரக்சனில் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் ‘வனமகன்’..காடும் காட்டிலேயே பிறந்து வளர்ந்து நகரத்திற்கு வரும் வாலிபன் ஒருவனையும் மையப்படுத்தி புதிய களத்தில் இந்தப்படஹ்தை இயக்கியுள்ளார் இயக்குனர் விஜய்..

சாயிஷா சைகல் கதாநாயகியாக நடித்துள்ள இந்தப்படத்தை வரும் மே-19ஆம் தேதி ரிலீஸ் செய்வதாகத்தான் முடிவு செய்து வைத்திருந்தார் விஜய்.. ஆனால் இப்போது படத்தை ஜூன்-23க்கு ரிலீஸ் செய்வதாக மாற்று தேதியை அறிவித்து, படத்தை ஒரு மாதம் கழித்து ரிலீஸ் செய்வதற்கான விளக்கத்தையும் கொடுத்துள்ளார் விஜய்..

தமிழ் திரையுலகம் சம்பந்தப்பட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து வரும் மே-3௦ முதல் போராட்டத்தில் திரையுலகம் இறங்க இருப்பதாக விஷால் ஏற்கனவே அறிவித்துள்ளார்.. இந்த நிலையில் வணமகனை ரிலீஸ் செய்தால் வெறும் 11 நாட்கள் மட்டுமே தியேட்டரில் ஓடும் சூழல் உருவாகும். அது படத்தின் வசூலை பாதிக்கும் என்பதால் விஷாலின் ஆலோசனைப்படி ஜூன்-23க்கு மாற்றியுள்ளதாக விஜய் கூறியுள்ளார்..

விஷாலின் போராட்ட முடிவுக்கு தியேட்டர் அதிபர்கள் தரப்பில் இருந்து எதிருப்புகள் கிளம்பினாலும், ‘வனமகன்’ குழுவினர் விஷாலின் முடிவை ஆதரித்து தங்களது பட ரிலீஸ் தேதியை மாற்றி வைத்துள்ளனர்.

Comments are closed.