ஏக் தம்மில் ஒரே கட்ட படப்பிடிப்பாக ஜீவா நடிக்கும் ‘கீ’..!

198

jiiva
ஜீவா நடித்துள்ள சங்கிலி புங்கிலி கதவ தொற’ படம் வரும் வெள்ளி கிழமை ரிலீசாக இருக்கிறது. இந்தநிலையில் ஜீவா நடித்துவரும் புதிய படம் தான் ‘கீ’.. ‘ஈ’, ‘கோ’ என அவருக்கு சென்டிமென்ட்டாக ஒர்க் அவுட்டான ஒற்றை எழுத்து டைட்டிலை கொண்ட இந்தப்படத்தை ‘நாடோடிகள்’ தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கிறார்..

செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். கதாநாயகியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். மற்றும் ஆர்.ஜே.பாலாஜி, அணைகா சோட்டி, சுகாசினி ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடிக்கின்றனர்., ஏப்-21ஆம் தேதி தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு மே-20ல் முடிவடைகிறது. மொத்த படப்பிடிப்பும் ஒரே கட்டமாக நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.