அண்ணனின் தாடிக்குள் ஒளிந்துள்ள ரகசியத்தை ‘கிரகணம்’ விழாவில் உடைத்தார் நடிகர் கிருஷ்ணா..!

194

grakanam kreshna

பிச்சைக்காரன், இறைவி, என்கிட்டே மோதாதே உள்ளிட்ட பல படங்களை வெற்றிகரமாக விநியோகம் செய்த கே.ஆர்.பிலிம்ஸ் சரவணன், பிக் பிரின்ட் பிக்சர்ஸ், வென்பெர் என்டர்டெய்ன்மென் மற்றும் ஹைசி இண்டர்நேஷனல் ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் தான் ‘கிரகணம்’.. பல குறும்படங்களை இயக்கிய அனுபவம் கொண்ட இளன் என்கிற இளம் இயக்குனர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார்.

கிருஷ்ணா, கயல் சந்திரன் என இரண்டு ஹீரோக்கள். கதாநாயகியாக நந்தினி என்கிற புதுமுகம் நடித்துள்ளார்.. மற்றும் கருணாஸ், ஜெயபிரகாஷ், கருணாகரன், கும்கி அஸ்வின், சிங்கப்பூர் தீபன் உள்ளிட்ட பலர் இந்தப்படத்தில் நடித்துள்ளனர். ‘8 தோட்டாக்கள்’ படத்திற்கு இசையமைத்த சுந்தர மூர்த்தி இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஸ்ரீ சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். மணி படத்தொகுப்பு செய்துள்ளார்.

இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றபோது, கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக தலைநகர் டில்லியில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினார்கள் அல்லவா..? அதில் உயிர்நீத்த இரண்டு விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இந்த விழாவில் படத்தயாரிப்பாளர் சார்பாக ஒரு கணிசமான நிதி உதவி வழங்கப்பட்டது நெகிழ்ச்சியானதாக அமைந்தது.

படத்தின் நாயகன் கிருஷ்ணா பேசும்போது, “இந்தப்படத்தில் நான் நடிப்பதற்கு காரணம் இளன் தான். இளனை நான் சந்திக்கும்போது அவருக்கு 21 வயது. இந்தப்படத்தின் கதையை வெறும் இருபது நிமிடம் மட்டுமே இயக்குனர் இளன் என்னிடம் சொன்னார்.. படத்தில் நான் அணியும் ஆடைகளை கூட எனக்கு பிடித்த மாதிரி என் சொந்த ஆடைகளையே அணிய சொல்லிவிட்டார்” என்றார்.

மேலும் கிருஷ்ணா பேசும்போது தனது அண்ணன் இயக்குனர் விஷ்ணுவர்தன் தாடிவைத்த ரகசியத்தை உடைத்தார்.. அதாவது ‘அறிந்தும் அறியாமலும்’ படத்தின் கதையை எடுத்துக்கொண்டு வாய்ப்பு தேடி அலைந்தபோது விஷ்ணுவர்தனுக்கு வயது 22 தான்.. அதனால் சின்னப்பையனாக இருக்கிறானே என அவரை நம்பி யாரும் வாய்ப்பு தர முன்வரவில்லையாம். அதனால் தான் அவரது தந்தை பட்டியல் சேகரே தயாரிப்பாளராக மாறினாராம்.. அதன்பின் பெரிய ஆளாக தெரிவதற்காக தாடி வைத்துக்கொண்ட விஷ்ணுவர்தன் இன்றுவரை தாடியை எடுக்காமல் அப்படியே மெயின்டெய்ன் பண்ணி வருகிறாராம்.

இந்தப்படத்தில் கொஞ்சம் ஆர்ட்டிஸ்ட் வேல்யூ வேண்டும் என்பதற்காக தானே சொந்த முயற்சி எடுத்து ஜெயபிரகாஷ், கருணாஸ், கருணாகரன் ஆகியோரை குறைந்த சம்பளத்தில் கன்வின்ஸ் செய்து நடிக்க அழைத்து வந்தாராம் கிருஷ்ணா. அவர்களும் நிறைவான கேரக்டர்கள் என்பதால் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டு நடித்தார்களாம்.

Comments are closed.