
இயக்குனர் இமயம் பாரதிராஜா சர்வதேச அளவிலான திரைப்பட பயிற்சி நிலையம் ஆரம்பித்துள்ளார். இதன் துவக்கவிழாவில் ரஜினி, கமல், சிவகுமார், வைரமுத்து, கார்த்தி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்தினார்கள். விழாவில் இறுதியாக பேசிய ரஜினி, பாரதிராஜாவுடனான தனது இனிய நினைவுகளை பகிர்ந்துகொண்டார்.
“நான் முதல்ல பாரதிராஜாவை பாரதி என்றுதான் கூப்பிடுவேன். ஒருமுறை இளையராஜா, பாரதிராஜாவின் வயசைப்பற்றி என்னிடம் சொன்னதில் இருந்து அவரை பாரதிராஜா சார் என்றுதான் சொல்வேன். அவரது உண்மையான வயசு என்னான்னு தெரிஞ்சா அவரைப் பார்த்து கைஎடுத்து கும்பிடுறவங்க சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து விடுவார்கள்.
பாரதிராஜா சாரை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவருக்கு என்னை பிடிக்கும் ஆனா பிடிக்காது. ஊடகங்கள்ல அவருகிட்ட ரஜினியைப்பற்றி என்ன நினைக்கிறீங்க? அப்படின்னு கேட்ட கேள்விக்கு, நல்ல மனிதன் அப்படின்னுதான் சொல்வார். ஆர்ட்டிஸ்டா என்ன நினைக்கிறீங்கன்னு கேட்டா? வெரி குட் மேன் என்பார். நல்ல நடிகன்னு சொல்லவே மாட்டார்.
பாரதிராஜாவிடம் கள்ளம் கபடம் இல்லாத ஒரு முரட்டுத்தனமான அன்பு. அதனால்தான் அவரை எல்லோருக்குமே பிடிக்குது. அவரே ஒரு பல்கலைக்கழகம். இப்ப முறைப்படி ஒரு நடிப்பு பயிற்சி கல்லூரியை தொடங்கியிருக்காரு. இது வந்து அவர் வாழ்க்கையிலே மிகப்பெரிய சாதனை. மிகப்பெரிய விசயம். பாரதிராஜாவின் இந்த இன்ஸ்டிடியூட் மிகப்பெரிய அளவில் வளர வேண்டும் என்று வாழ்த்துகிறேன்” என்று வாழ்த்தினார் ரஜினி..
Comments are closed.